லட்சுமி மிட்டலுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகையே ஆட்டிப் படைத்து வரும் பொருளாதார பெருமந்தம், உலக கோட்டீஸ்வரர்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசமான பொருளாதார சூழலால் இங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய கோடீசுவரர்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதிலும் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த லட்சுமி மிட்டல்தான்.

உலகின் நம்பர் ஒன் உருக்காலை நிறுவனமான ஆர்செலார் மிட்டல் அதிபரான அவருக்கு மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை இந்தியப் பணக்காரர்களில் முதலிடம் வகித்து வந்த அவர், இப்போது இரண்டாமிடத்துக்குப் போய்விட்டார். அவரது இடத்துக்கு வந்திருப்பவர் முகேஷ் அம்பானி.

மிட்டல் கடந்த 4 ஆண்டுகளாக கோடீசுவரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். ஆண்டு தொடக்கத்தில் அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது அவரது சொத்து மதிப்பு 77ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+