தடாகம் கோவில் பாதையில் குடிகாரர்கள் அட்டகாசம்
கோவை: கோவை தடாகம் வனப்பகுதியில், பொன்னூத்து அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையை குடிகாரர்கள் தங்களது 'பார்' ஆக மாற்றியிருப்பதால் கோவிலுக்கு போகும் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை தடாகம் அருகே மலைப் பகுதியில் அமைந்துள்ளது பொன்னூத்து அம்மன் கோயில். இந்த கோவில் அமைந்துள்ள வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு செல்ல தடை உள்ளது.
ஆனால் அதை யாரும் மதிப்பது இல்லை. பிளாஸ்டிக் குவியல்கள் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி வருகின்றன.
இது போதாதென்று குடிகாரர்களின் அட்டகாசமும் இப்போது அதிகரித்துள்ளது.
விடுமுறை நாள்களில் கோயிலுக்கு வரும் சிலர், வனப் பகுதியிலேயே மது அருந்திவிட்டு பக்தர்களிடம் தகராறில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களை அங்காங்கே உடைத்து சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி வருகின்றனர்.
அம்மனை தரிசிக்க வருபவர்களுக்கு வனத்துறையினரும், காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் பக்தர்கள்.
பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தால்தான் வன வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களை நுழையவிடாமல் தடுப்பது வனத் துறையினரின் கடமை என்கிறார் ஓசை சுற்றுச் சூழல் அமைப்பு தலைவர் காளிதாஸ்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அன்வர்தீனிடம் கேட்டால், பொன்னூத்து அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படுவதுடன் அங்கு மது அருந்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்களை வனப் பகுதிக்குள் பயன்படுத்த தடையுள்ளது. இத் தடை தீவிரமாக அமலாக்கப்படும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications