பொங்கல்: சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 4 மற்றும் 11 தேதிகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை சென்டிரல் நிலையம் வந்தடையும்.
அதேபோல ஜனவரி 5 மற்றும் 12 தேதிகளில், சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் நாகர்கோவில் புறப்படும்.
இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எழும்பூர் வரை இன்னொரு சிறப்பு ரயில்:
அதே போல நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 5, 12, 19 மற்றும் 26 தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து, ஜனவரி 6, 13, 20 மற்றும் 27 தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், நாகர்கோவிலை மறுநாள் காலை 5.30 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில்கள், வள்ளியூர், நெல்லை, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய இடங்களில் நி்ன்று செல்லும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications