வங்கதேசத்தில் மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சி
டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்திற்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நேற்று அங்கு பொதுத் தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. கிட்டத்தட்ட அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 300 எம்.பி. சீட்களில், அவாமி லீக் கட்சிக்கு மூன்றில் இரு பங்கு இடங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் ஹசீனாவின் பரம வைரியான கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சிக்கு, ஹசீனாவுக்கு கிடைத்த சீட்களில் பத்தில் ஒரு பங்கே கிடைத்துள்ளது.
கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் கலீதா ஜியா கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையி்ல் தற்போது ஹசீனாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஆஸாதுஸ்மான் கூறுகையில், எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் அவாமி லீக் கட்சியால் ஆட்சி நடத்த முடியும் அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
இதுவரை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட 295 தொகுதிகளில், அவாமி லீக் கட்சிக்கு 229 சீட்கள் கிடைத்துள்ளன.
அவாமி லீக் சார்பில் போட்டியிட்ட இந்து வேட்பாளர்கள் பலரும் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கதேச தேசியவாத கட்சிக்கு 25 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. கலிதா ஜியா போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமிக்கு ஒரே ஒரு சீட்தான் கிடைத்தது.
தேர்தல் தோல்வி குறித்து கலீதா ஜியா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரிஸ்வி அகமது கூறுகையில், எங்களது ஆதரவாளர்கள் பல இடங்களில் ஓட்டுப் போட விடாமல் தடுக்கப்பட்டனர். இதனால்தான் எங்களுக்கு பல தொகுதிகள் கிடைக்காமல் போய் விட்டன. இதுகுறித்து நாங்கள் வழக்கு தொடருவோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications