பிரபாகரனின் தந்திரப் பேச்சுக்கு இந்தியா மயங்காது: பொகல்லகாமா
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக பிரபாகரன் கூறுவதை இந்தியா நம்பாது, அதில் மயங்காது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறியுள்ளார்.
கிளிநொச்சி வீழ்ந்துள்ளதாக ராணுவம் கூறியுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார் பொகல்லகாமா.
அவர் கூறுகையில், பிரபாகரன் உடனடியாக ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும். அதிபர் ராஜபக்சேவின் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும். வன்முறை, தீவிரவாதத்தை விட வேண்டும்.
தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்ற நடவடிக்கைளில் தன்னையும் அவர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர் பகுதிகளிலும், இலங்கையிலும் நீடித்த அமைதிக்கு அவர் வழி ஏற்படுத்த வேண்டும்.
மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே, பிளவை ஏற்படுத்த இலங்கை முயல்வதாக கூறியிருந்தார். பேச்சுவார்த்தைக்கும், அமைதிககும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் அதை கண்டு இந்தியா ஏமாந்து விடாது. பிரபாகரனின் பேச்சைக் கேட்க இந்தியாவில் யாரும் தயாராக இல்லை என்றார் பொகல்லகாமா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications