'குழாயை' போட்டு கேப்டனை விரட்டிய திமுக

வளையங்குளம் பகுதிக்கு திறந்த வேனில் ஏராளமான தொண்டர்களுடன் விஜயகாந்த் சென்றார். அப்போது சில அடி தூரத்தில் அமைச்சர் செல்வராஜ், திமுக எம்பி பவானி ராஜேந்திரன் ஆகியோர் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
திமுகவினர் பிரச்சாரம் செய்து முடிக்கும் வரை விஜயகாந்த் வளையங்குளத்தில் காத்திருந்தார். ஆனால், தங்கள் தலைவரை காக்க வைப்பதா என்று தேமுதிகவினர் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் கேட்டுக் கொண்டதையடுத்து திமுகவினர் பிரச்சாரத்தை விரைந்து முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
விஜய்காந்துடன் திமுக தொண்டர்கள் வாக்குவாதம்:
எலியார்பத்தியில் விஜயகாந்த் பிரசாரம் செய்த போது நாங்கள் தேமுதிகவுக்கு வாக்களிக்க மாட்டோம், உதயசூரியனுக்குத்தான் வாக்களிப்போம் என்று கூட்டத்தில் இருந்த சில திமுகவினர் விஜயகாந்த்தை நோக்கி கத்தினர்.
பதிலுக்கு விஜயகாந்த்தும் பேச இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக நிர்வாகிகள் விரைந்து வந்து தொண்டர்களை கட்டுப்படுத்தினார்.
பேச்சை தடுத்த பாட்டு சத்தம்..:
ஆனால், பின்னர் விஜயகாந்த் தொடர்ந்து பேச முயன்றபோது அருகே இருந்த திமுக தேர்தல் அலுவலகத்தில் உள்ள ஒலி பெருக்கியில் மகா சத்தமாக பாடல்களை ஒலிபரப்பினர்.
இதனால் விஜயகாந்த் கண்கள் சிவந்தபடி 'குழாய் செட்டை'யே (Loud speaker) முறைத்தபடி பாதியிலேயே பேச்சை முடித்து விட்டு கிளம்பினார்.
கள்ளிக்குடி விஜயராஜ்!:
கள்ளிக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விஜய்காந்த் இன்று பிரச்சாரம் செய்தார்.
ஒரு குழந்தைக்கு விஜயராஜ் என்று அவர் பெயர் சூட்டிய அவர்,
திமுகவும் அதிமுகவும் கூட்டணி மற்றும் பணத்தை நம்பி வாக்கு கேட்டு வருகின்றன. நான் உங்களை நம்பி வந்திருக்கிறேன்.
எனக்கு கூட்டணி மக்களுடன் தான் என்றார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications