ஜெ வருகை-உளவுப்பிரிவு 'வார்னிங்': ஒயிலாட்டம், கரகாட்டம்..

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை காலை மதுரை வருகிறார்.

6ம் தேதி வரை 4 நாட்கள் அவர் சூறாவளி சுற்றுப் பயணம் செய்கிறார்.

இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம்...:

இதய தெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் நாளை (3ம் தேதி) காலை தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். காலை 10 மணி அளவில் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு புரட்சித் தலைவிக்கு மேளதாளம் முழங்க, யானைகள் புடைசூழ, குறவன்-குறத்தி ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், குதிரைப் படையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

பின்னர் சங்கம் ஹோட்டலில் அவர் தங்குகிறார். எனவே புரட்சித் தலைவியை வரவேற்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து 3 நாட்கள் ஏராளமான இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்றி வாக்கு சேகரிக்கும் ஜெயலலிதா 6ம் தேதி திருமங்கலம் நகரில் உள்ள தேவர் சிலை அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

வன்முறை ஏற்படலாம்-உளவுத்துறை வார்னிங்:

இதற்கிடையே திமுக- அதிமுக இடையே மோதல் உச்ச நிலையில் ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளதையடுத்து அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு உளவுத்துறையினர் 'எச்சரிக்கை மணி' அடித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில் பங்கேற்று விட்டு ஜெயலலிதா திரும்பியபோது, கட்டுக்கடங்காத கும்பல் அவரது காரைத் தாக்கியது.

அவரது கட்சியினரே அந்தத் தாக்குதலை நடத்தியதாக திமுகவினரும், திமுகவினர் தான் தாக்கியதாக ஜெயலலிதாவும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.
இந் நிலையில் அதே போன்ற சம்பவம் தற்போதும் நடக்கலாம், எனவே போலீசார் மிக மிக எச்சரிக்கையாக இருக்குமாறு உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது.

பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் இரவில் மதுரை திரும்பும்போது அவருக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை எனவும் உளவுத்துறை கூறியுள்ளது.

எங்களிடம் கண்ணியம், கட்டுப்பாடு..அதிமுக வேட்பாளர்:

இதற்கிடையே திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மத்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் ஜெயப்பிரகாஷ், தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா ஆகியோர் இன்று திருமங்கலம் வந்தனர்.

அவர்களிடம் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கொடுத்த கோரிக்கை மனுவில்,

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எங்களை விதிமுறைப்படி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்கள் கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறோம். ஆனால் திமுகவினர் எப்படியாவது அதிமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

தொகுதி முழுவதும் 3 மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் 24 பேர், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஒருவர் ஆக மொத்தம் 28 பேரும் போலீஸ் பாதுகாப்போடு தொகுதிக்குள் முகாமிட்டு வன்முறையை தூண்டுகிறார்கள்.

அவர்களை பின் தொடர்ந்து செல்லும் வாகனங்களில் பயங்கர ஆயுதங்கள், பணப் பெட்டிகள் கொண்டு வரப்படுகின்றன. போலீசார் முன்னிலையிலையே தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் தாக்கப்படுகிறார்கள்.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், தளவாய்சுந்தரம், பி.எச்.பாண்டியன் ஆகியோர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இதனால் தமிழக போலீசை நம்பி தேர்தல் பணியை செய்ய முடியாது. எனவே திமுக அரசின் அதிகாரத்தை தவிர்த்து தேர்தல் கமிஷன் முழு அதிகாரத்தை கையில் எடுத்து இடைத் தேர்தல் நடத்த முன்வர வேண்டும். தொகுதி முழுவதும் மாநில போலீசின்றி, துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும். ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+