உங்களுக்கு நோட்டு-எனக்கு ஓட்டு: விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

Vijaykanth
மதுரை: தேமுதிகவிற்கு ஓட்டு போடக் கோரி மக்கள் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருமங்கலம் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து, கைத்தறி நகரில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் பேசுகையில்,

தேமுதிகவிற்கு ஏன் கூட்டம் கூடுகிறது என திமுக, அதிமுகவினர் யோசிக்க வேண்டும். திமுகவினர் ஆட்சியின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்காமல், பணம் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். காலையில் ஒரு கட்சியினர், மாலையில் ஒரு கட்சியினர் என மாறி மாறி காசு கொடுக்கின்றனர்.

தொகுதியில் இரண்டு ரவுண்டு பண பட்டுவாடா முடிந்து விட்டது. 8ம் தேதி மூன்றாவது ரவுண்டு பட்டுவாடா நடக்க உள்ளது. தேமுதகவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுகள் கூடுகிறது.

திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கு திருப்புமுனையாக அமைந்தது. திருமங்கலம் தேமுதிகவுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே திருப்புமுனையாக அமைய வேண்டும்.

திருமங்கலம் என ஏன் பெயர் வந்தது என பலருக்கும் தெரியவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் திருமணத்திற்காக திருமாங்கல்யம் செய்த இடம் இது. நாளடைவில் பெயர் மாறி திருமங்கலம் ஆனது.

இந்தப் பகுதியில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் வசிக்கின்றனர். கைத்தறி நெசவுத் தொழில் நசிந்த போது, ரூ. 10 லட்சத்துக்கு நானே என் சொந்தப் பணத்தி்ல் கைத்தறி துணிகளை வாங்கினேன்.

ஓட்டு வாங்க இங்கே டான்ஸ் கச்சேரி நடத்துகின்றனர். தற்போது இந்தத் தொகுதியில் மட்டும் ஒழுங்காக மின் வினியோகம் கிடைக்கிறது. திருமங்கலத்தில் சிறு தொழிற்சாலைகள் மின் வெட்டால் நசிந்துவிட்டன. 9ம் தேதிக்குப் பின், மீண்டும் மின்சார தடை வந்துவிடும்.

நீங்கள் பார்ப்பதால் தான், டிவி சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் டிவியை நம்பி கெட்டு விட்டது.

தமிழகத்தில் மாற்றம் வேண்டுமென்றால், திமுக, அதிமுக இரு கட்சிகளுமே இருக்கக் கூடாது. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை கொடுப்பேன். நல்ல அரசியலை மக்களுக்கு சொல்லி கொடுக்கவுள்ளேன்.

தேமுதிகவிற்கு ஓட்டு போடக் கோரி எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.

நீங்கள் கேட்காமலேயே டிவி, கேஸ் அடுப்பு, 2 ஏக்கர் நிலம் தருபவர்கள், அதை அனைவருக்கும் தரவில்லை. இளைஞர்களுக்கு நல்ல வேலையை தர முடியவில்லை. போலீஸ் வேலைக்கே லஞ்சம் வாங்குகிறார்கள். இதன் மூலம் சட்டத்தையே விலைக்கு வாங்குகிறார்கள்.

திருமங்கலத்தில் எங்களுக்கு திருப்புமுனை ஏற்பட்டால் தமிழகமே உங்களை பாராட்டும்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் மேல் நம்பிக்கை இல்லை. கூட்டணி மீதுதான் நம்பிக்கை. இந்தத் தேர்தலுக்காக ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதால் திமுகவுக்கு எந்த ஆதாயமும் கிடையாது. அதேபோல் அதிமுகவுக்கும் இந்த ஒரு சீட்டால் எந்த ஆதாயமும் கிடையாது. இங்கு தேமுதிக வெற்றி பெற்றால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டாக உயரும்.

இங்கு ஓட்டு கேட்பவர்கள் நல்ல மருத்துவமனை, சாலை வசதி, அடிப்படை வசதி செய்து தருகிறோம் என்று சொல்கிறார்களா?. ரூ. 2,000 கொடுத்துதானே ஓட்டு கேட்கிறார்கள்.

அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களது பணம் அல்ல. அதனால் நோட்டு உங்களுக்கு; ஓட்டு எனக்கு.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.500 குடும்ப நிதியாக கொடுக்கலாம் என்றேன். அது எப்படி கொடுக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என்று கூறினேன். அது எப்படி முடியும் என்று திமுக, அதிமுகவினர் கேட்கிறார்கள்.

இப்பொழுது நீங்கள் ஓட்டுக்காக வீடு தேடி வந்து பணம் கொடுக்கும் போது ரேஷன் பொருட்கள் மட்டும் வீடு தேடி வந்து கொடுக்க முடியாதா?.

உங்களிடம் ஓட்டு கேட்டு பணம் கொடுக்க வருபவர்களிடம் நீங்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டாவையும் சேர்த்து கொடுங்கள் என்று கேளுங்கள். கொடுக்கிறார்களா என்று பார்ப்போம்.

பணத்தைக் கொடுத்து மீண்டும் அதை எடுப்பதுதான் அவர்களின் குறிக்கோள் என்றார்.

வெற்றி வாய்ப்பு பிரகாசம்-பிரேமலதா:

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் இந்தத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறுகையில்,

இங்கு தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. திருமங்கலத்தில் கடந்த தேர்தலைவிட தேமுதிகவுக்கு இம்முறை மக்கள் ஆதரவு பெருகிவுள்ளது.

பண பலம், அதிகார பலம் உள்ள 2 பெரிய கட்சிகள் மோதுகின்றன. இவர்களிடையே தேமுதிகவும் போட்டியிடுகிறது. அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் மனசாட்சியுடன் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+