ஐ.டி. கம்பெனி நெருக்கடி! பெங்களூர் பார்களில் விற்பனை குறைவு!!

Subscribe to Oneindia Tamil

Pub
பெங்களூரு: ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் தொடரும் ஊழியர் குபறைப்பு, சம்பளம் உயராமல் நிற்பது, பதவி இறக்கம் போன்ற எதிர்மறை விளைவுகளால் பெங்களூரில் மது விற்பனை கணிசமாகக் குறைந்துவிட்டதாம்.

குறிப்பாக பார்கள் மற்றும் பப்களில் அடியோடு இளைஞர் கூட்டம் குறைந்துவிட்டதாம்.

பல பிரபல பப்களில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மது விற்பனை படுத்துவிட்டதாம்.

ஊழியர்கள் செலவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஓட்டல், மது பார்களுக்கு செல்வதைக் குறைத்துக் கொண்டு ரொம்ப நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டார்களாம்.

வீக் எண்ட் பார்ட்டிகள், எதற்கெடுத்தாலும் கொண்டாட்டங்கள் என குளுகுளுவென மிதந்து கொண்டிருந்த இளைஞர்கள் பாடு இப்போது பெரும் திண்டாட்டமாகிவிட்டதாக புளஅளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல கால் சென்டர்கள் சத்தமின்றி மூடப்பட்டு வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சி, மும்பை தீவிரவாத தாக்குதல் போன்றவற்றால் மது பார்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தனைக்கும் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பின் போது கூட்ட இப்படி நிகழ்ந்ததில்லை, என்கிறார் பார்கள் சங்கத் தலைவர் ஆஷிஷ் கோத்தாரி.

முன்பு 15 பேர் கொண்ட குழு பார்ட்டி கொண்டாட, ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்போது அது குறைந்து விட்டது எனப் புலம்புகின்றனர் பார் உரிமையாளர்கள்.

பெரும்பாலும் பாருக்கு வருபவர்கள் வயிறு முட்ட குடிப்பார்கள். நள்ளிரவு தாண்டியும் பாரை விட்டுப் போகமாட்டார்கள். ஆனால் இப்போது குடிப்பதை ஓரளவோடு நிறுத்தி விடுகின்றனர். முன்பெல்லாம் தலைக்கு ரூ.1000 வரைகூட கட்டணம் வசூலிக்கப்பட்டது

இப்போது அது ரூ.300-400 ஆகக் குறைந்துவிட்டது. இவர்களும் கூட நின்றுவிடுவார்களோ என்று பயமாக உள்ளது, என்கிறார் ஒரு பார் உரிமையாளர்.

அடடா... எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்பட்டிருக்கு பாத்தீகளா..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+