புறக்கணித்த பிள்ளைகள் - போலீஸ்காரர் மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பிள்ளைகள் சரிவர கவனிக்காமல் புறக்கணித்ததால் மனம் உடைந்த போலீஸ்காரரின் மனைவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவ அம்மாள். இவரது கணவர் சுப்பையா பாண்டியன். போலீஸ்காரராக பணியாற்றி தற்போது மரணம் அடைந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மாதவ அம்மாள் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வயதான காலத்தில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
நேற்று அருகில் உள்ள கால்வாய்க்கு குளிக்க செல்வது போல் கையில் மண்எண்ணை கேனுடன் சென்றார். ஆட்கள் இல்லாத கால்வாய் கரையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் அவரது உடல் கருகி அலறினார்.
உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடிசென்று பார்த்தனர். அதற்குள் மாதவ அம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications