மதுரை வந்தது துணை ராணுவம் - நாளை முதல் திருமங்கலத்தில் பணி
மதுரை: தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின்படி துணை ராணுவப் படையின் நான்கு கம்பெனி வீரர்கள் மதுரை வந்துள்ளனர். மற்ற கம்பெனிகளும் இன்று இரவுக்குள் மதுரை வந்து விடும். நாளை முதல் இவர்கள் திருமங்கலத்தில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் டிசம்பர் 27ம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு திமுக, அதிமுகவினர் இடையே கடும் மோதல் நடந்தது.
ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால் துணை ராணுவப் படையினரை வரவழைக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் துணை ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தது.
எட்டு கம்பெனி பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நான்கு கம்பெனி துணை ராணுவப்படையினர் மதுரை வந்தனர்.
ஒவ்வொரு கம்பெனியிலும் 86 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் திருமங்கலம் சென்றடைந்தனர். இன்னொரு பிரிவு மதுரையில் உள்ளது.
மீதமுள்ள கம்பெனிகளும் இன்று இரவுக்குள் வந்து விடும் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் நாளை முதல் திருமங்கலம் தொகுதியில் இந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications