ஜெ.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால்தான் அவர் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட எஸ்.கோபாலபுரம் என்ற இடத்தில் மு.க.அழகிரியுடன் இணைந்து, மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், திமுக ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதுபோன்று பல நல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களுக்காக ஓயாமல் உழைக்கக் கூடிய தலைவர் கருணாநிதி.

ஆளுங்கட்சி வேட்பாளரை தேர்ந் தெடுத்தால் திருமங்கலம் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங் களையும் சுலபமாக பெறலாம். திருமங்கலம் தொகுதி வளமான
தொகுதியாக மாற திமுகவை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

ஜெ.வுக்குப் பொறுக்க முடியவில்லை ..

நாங்கள் குடும்ப அரசியல் நடத்துவதாக ஜெயலலிதா கூறுகிறார். நானும் அண்ணன் அழகிரியும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திருமங்கலம் தொகுதியில் அராஜகம் நடப்பதாக அவர் கூறி வருகிறார்.

தொகுதியில் உள்ள 190 வாக்குச் சாவடிகளிலும் திமுகவினரே ஓட்டு களை போடுவதற்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய் வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அப்படி என்றால் நாங்கள் ஏன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர் இதுபோன்று தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+