டெக் மஹிந்திராவுடன் இணைப்பா?-சத்யம் கடுகடு!
மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை டெக் மஹிந்திராவுடன் இணைப்பதாக வந்த மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கும் முறையான விளக்கம் தந்துள்ளது சத்யம் நிறுவனம்.
இந்த வதந்திகளால் இன்று சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு 3.56 சதவிகிதமும், டெக் மகிந்திராவின் பங்குகள் 12 சதவிகிதம் வரையிலும் உயர்ந்தன.
இதுகுறித்து சத்யம் நிறுவனம் கூறியிருப்பதாவது:
ஒரு வர்த்தக நாளிதழின் இன்றைய பதிப்பில், டெக் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக சத்யம் நிறுவனத்துடன் இணையப் போகிறதென்று செய்தி வெளியாகியிருந்தது. மேலும் ஹெச்பி, ஐபிம், மைண்ட்ரீ நிறுவனங்களும் சத்யம் நிறுவனத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை, என்று சத்யம் விளக்கம் கூறியுள்ளது.
செபியிலும் இந்த விளக்கத்தை இன்று அளித்துள்ளது சத்யம்.
பங்குகளை வாங்க விரும்பும் ஊழியர்கள்:
இந்நிலையில் சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்க அதன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போவதைத் தடுக்கும் விதத்தில், சத்யம் நிறுவனப் பங்குகளை வெளிசந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என பெரும்பாலான ஊழியர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் மூன்றாவது காலாண்டுக்கான முடிவுகள் வெளியான பிறகு பங்குகள் வாங்குவதில் இறுதி முடிவு மேற்கொள்ள உத்தேசித்துள்ளனர்.
ஒருவேளை பெரும்பாலான பங்குகள் ஊழியர் கைகளுக்கு வந்துவிட்டாலும் கூட தலைவராக ராமலிங்க ராஜுவே நீடிக்கட்டும் என்று அவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications