பெங்களூர் தமிழ் பெண் கொலை-கணவனின் கள்ளக் காதலி சரண்
கிருஷ்ணகிரி: துண்டு துண்டாய் வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் கிடந்த பெங்களூர் தமிழ்ப் பெண்ணின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது கணவரின் கள்ளக் காதலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 30ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் ஒரு பெண்ணி்ன் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தன.
ஓரிடத்தி்ல் உடல் பகுதி, இன்னொரு இடத்தி்ல் கை, கால்கள், இன்னொரு இடத்தி்ல் விரல்கள் என பயங்கர கோலத்தி்ல் அந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பெங்களூர் லிங்கராஜபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை லட்சுமி (28) என்று தெரியவந்தது.
தனது மனைவியை 30ம் தேதி முதல் காணவில்லை என லட்சுமியின் கணவர் சம்பங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந் நிலையில் இந்தக் கொலை குறித்து பெங்களூர் போலீசாரின் உதவியோடு தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது சம்பங்கிக்கு செலின் (28) என்ற கள்ளக் காதலி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பங்கி மற்றும் செலின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சம்பங்கி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பியூனாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய செலின், இலங்கையைச் சேர்ந்தவராவார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது. இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், தன்னை திருமணம் செய்யுமாறு செலின் கூறியதை சம்பங்கி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு மனைவி, இரு குழந்தைகள் இருப்பதாகக் கூறி திருமணத்துக்கு மறுத்தார்.
இந் நிலையில் தான் லட்சுமி கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் கிடந்தார்.
செலின் மீது சந்தேகமடைந்த தமிழக போலீசார் எனவே, செலினைப் பிடிக்க தனிப்படையை பெங்களூருக்கு அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் செலின் நேற்று திருவள்ளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பரணீதரன் முன்னிலையில் சரணடைந்தார். தன்னை சந்தேகப்பட்டு போலீசார் தேடுவதால், கோர்ட்டில் சரண் அடைவதாக அவர் தெரிவித்தார்.
செலினை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சம்பங்கியின் உதவியோடு இந்தக் கொலை நடந்ததா இல்லை செலினே திட்டமிட்டு இதைச் செய்தாரா என்று தெரியவில்லை. செலினை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் முழு விவரம் வெளிவரும்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications