தெ.தேசத்துடன் கை கோர்க்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
ஹைதராபாத்: ஆந்திராவில் இடதுசாரிகளின் முயற்சியால் உருவாகி வரும் மாபெரும் கூட்டணியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இணைகிறது. இக்கூட்டணியில் ஏற்கனவே தெலுங்கு தேசமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை காங்கிரஸுடன் இணைந்து சந்தித்த டி.ஆர்.எஸ் தற்போது தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், தெலுங்குதேசம், இடதுசாரி கூட்டணியில் இணையும் நேரம் வந்து விட்டது. இருப்பினும் இதுதொடர்பான அரசியல் முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர் ராவ் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியாகும். விரைவில் அதை வெளியிடுவோம் என்றார்.
சந்திரசேகர் ராவ் கூறுகையில், நாங்கள் பல்வேறு போராட்டங்களில் முன்பு ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். இனியும் அவ்வாறே செயல்படுவோம்.
தெலுங்கு தேசம் கட்சிக்காக நானும், நாயுடுவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டுள்ளோம். மறுபடியும் எனது பழைய தோழருடன் இணைந்து செயல்படவிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இருவரும் இணைந்து பொதுப்பிரச்சினைகளுக்காக போராடும் நேரம் வந்து விட்டது என்றார்.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியும், காங்கிரஸும், டி.ஆர்.எஸ்ஸை இழுக்க தீவிரமாக முயன்று வந்தன. இந்த நிலையில் தெலுங்கு தேசம் முந்திக் கொண்டு விட்டது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அவர்கள் அபகரித்து விடாமல் தடுத்து இடதுசாரிகள் கூட்டணிக்கு கூட்டி வந்துள்ளார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications