For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்டன்: வரலாறு காணாத வட்டிக் குறைப்பு!

By Sridhar L
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து வங்கி (Bank of England) பெருமளவு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது.

அதன்படி பிரிட்டனின் புதிய வட்டி விகிதம் வெறும் 1.5 சதவிகிதம் மட்டுமே. கடந்த 315 ஆண்டுகளில் பிரிட்டனில் இந்த அளவு வட்டி குறைந்திருப்பது இதுவே முதல்முறை.

1990-க்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பிரிட்டன்.

பல வங்கிகள் திவாலாகிவிட்டன. ஒரே மாதத்தில் 6 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த 2009-ம் ஆண்டை எப்படிச் சமாளிக்கப் போகிறோமென்று தெரியவில்லை என பல நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்து, மக்கள் வயிற்றில் புளி கரைத்துள்ளன.

இந்த நிலையில் வங்கித் துறை நடவடிக்கைகளைச் சீராக்க வட்டிக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது இங்கிலாந்து வங்கி.

இதுவரை 3.5 சதவிகிதமாக இருந்த வட்டியை இப்போது வெறும் 1.5 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. 315 ஆண்டு பிரிட்டன் வரலாற்றில் இந்த அளவு வட்டி குறைந்திருப்பது இதுவே முதல்முறை.

அட... பிரிட்டனாவது பரவாயில்லை. அமெரிக்காவில் வட்டி என்ற பேச்சே கிடையாது. சில கடன்களுக்கு மட்டும் 0.25 சதவிகிதம். பல கடன்களுக்கு சுத்தமாக வட்டியே கிடையாது. ஜப்பானில் 0.01 சதவிகிதமாகிவிட்டது வட்டி விகிதம்.

ஐரோப்பிய மத்திய வங்கியும் பெருமளவு வட்டிக் குறைப்பில் இறங்கியுள்ளது. மேலும் வட்டியைக் குறைக்கும் முடிவில் இருப்பதையும் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு மேல் வட்டிக் குறைப்பில் ஈடுபடுவதும் ஆபத்து என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் இப்போதைக்கு அமைதி காக்கிறது.

வரிகள் நீக்கம்

வட்டிக் குறைப்போடு நின்று விடாமல் இன்னொருபடி கீழிறங்கவும் இங்கிலாந்தசு முடிவு செய்துள்ளது. நாட்டில் பணத்தின் அளிப்பை அதிகப்படுத்தும் விதத்தில் பொதுச் செலவை அதிகப்படுத்த உள்ளது. மேலும் பல வரிகளை அடியோடு ரத்து செய்யவும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது.

பொதுச் செலவு அதிகரித்தலும், வரிகள் ரத்தும்தான் உண்மையான பொருளாதார நிலைநிறுத்தலுக்கு வழிவகுக்கும். இநத மாதிரி தருணங்களில் மக்களை காப்பாற்ற உதவும். தேக்க நிலையிலிருந்து வெளிவர உடனடித் தீர்வு இவைதான் என இங்கிலாந்து பிரதம் கார்டன் பிரௌன் கூறியுள்ளார்.

நல்லா பலமா சொல்லுங்க பிரைம் மினிஸ்டர்... பல முனைகளில் வரி வசூலிப்பதுதான் அரசின் வேலை என பிடிவாதமாக இருக்கும் சிலரது காதுலயும் விழட்டும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X