Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க சிபிஐ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் ஊழலைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று இந்திய அரசே கூறி வருகிறது. 1974-1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட எல்லை முடிவுக்கான ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22-ந் தேதி மத்திய வேளாண்மைத்துறை மந்திரி சரத்பவார் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவு இந்திய எல்லைக் கோட்டிற்கு அப்பால் உள்ளது என்று கூறியுள்ளார். இதனால்தான் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. கச்சத்தீவு உடன்பாடு முடிந்து போனதாக கருதக்கூடாது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதாக நடைபெற்று வரும் இலங்கை போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இலங்கையின் வடபகுதி பெரும் அழிவுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி முறையில் பேச்சு வார்த்தை நடத்தியே தீர்வு காண வேண்டும்.

இலங்கை அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உடந்தையாக உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கை என்ன? மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த எப்போது செல்வார்.

சத்யம் நிறுவனம் பிரச்சினை குறித்து மத்திய அரசு ஆழமான புலன் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அரசே அந்த நிறுவனத்தை நடத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

சத்யம் நிறுவனத்திற்கு 7,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் இழப்பை சந்தித்த குளோபல் டிரஸ்ட் வங்கியில் பணியாற்றிய ஆடிட்டர்கள் தான் சத்யம் நிறுவனத்திற்கும் பணியாற்றியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். சத்யம் நிறுவனம் குறித்து மத்திய அரசு புலனாய்வு செய்ய வேண்டும்.

பொருளாதார நெருக்கடி குறித்து அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் வளர்வதற்கு அமெரிக்காவே காரணம். இதனால், இந்தியா அமெரிக்காவை நம்பக் கூடாது.

தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்று அணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் தனது பொருளாதார, அரசியல் கொள்கைகளால் மக்களின் ஆதரவை இழந்து நிற்கிறது என்றார்.

பேட்டியின்போது உடனிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம், உங்கள் பக்கம் கரன்சி காற்று வீசுவதாகவும், சொந்த விஷயமாக உதவி கேட்டு சென்றதற்கான கடிதம் உள்ளதாவும் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பணம் கொடுத்தவர்களை விட்டு விடட்டும். கரன்சி வாங்கிய பலிகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும், உதவி கேட்டு சென்றதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+