லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிரடி கைது
டெல்லி: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தி நடத்தி வரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் நேற்று டெல்லியில் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
சரக்கு லாரிகளின் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக கூறியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பல மாநிலங்களில் லாரிகளின் பெர்மிட்களை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
சங்கப் பொதுச் செயலாளர் ரமேஷ் குலாஸ்தி எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சரண் சிங் லோக்ரா, செயலாளர் வேணுகோபால், கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிப் அலி சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் குழுமியிருந்த இவர்களை போலீஸார் வளைத்துக் கைது செய்தனர். சில நிர்வாகிகள் ஓட முயன்றபோது அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்டிரைக்கை சட்டவிரோதம் என்று அறிவித்து லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications