காஞ்சிபுரத்தில் பரவும் வயிற்றுப் போக்கு-2 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வயிற்றுப் போக்கு பரவி வருகிறது. இதற்கு 2 பேர் பலியாகியுள்ளனர். காலரா பரவி வருவதாக மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம், டோல்கேட், லாலா குட்டைத் தெரு, மலையாள தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மேல்நிலை குடிநீர்த் தொட்டியிலிருந்து அசுத்த நீர் சப்ளை ஆனதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
மாசு கலந்த குடிநீரை பருகிய பலருக்கும் அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க போதிய இடம் இல்லை. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றிலும் தங்க வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது காலரா என்று பாதிக்கப்பட்ட சிலர் கூறுகின்றனர். இருப்பினும் டாக்டர்கள் இதுவரை காலரா ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கவில்லை.
தற்போது 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா, பாமக எம்எல்ஏ சக்திகமலாம்பாள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தனர். சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
முதியவர் - குழந்தை பலி
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள தெருவைச் சேர்ந்த வஜ்ரவேலு (70) என்பவரும், ஒரு வயது பெண் குழந்தையும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் உரிய சுகாதார நடவடிக்கைகள், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications