தமிழக ஐடி துறையில் முதலீடு செய்வது வீண்.. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி

சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்காடு வீராசாமி பேசுகையில், நான் வெளிப்படையாக சொல்கிறேன். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தற்போதுள்ள சூழலில், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு எதிர்காலம் இல்லை.
அதில் முதலீடு செய்வது வீண். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை மூடப்பட்டு விட்டன. கோவையிலும் இதே நிலைதான். ஐ.டி நிறுவனங்களுக்கு பல நாடுகளிலும் தோல்வி கிடைத்து வருகிறது.
அரசு என்னதான் தகவல் தொழில்நுட்ப் பூங்காக்களை கட்டிக் கொடுத்தாலும் கூட அதில் இருப்பதற்கு யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். வருவதற்கு ஆளே இல்லை.
எனவே தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பெரும் சரிவு காணப்படும் இந்த நேரத்தில் அதில் அதிக முதலீடுகளைச் செய்து பணத்தை வீணாக்காதீர்கள்.
அதற்குப் பதில் செங்கல், சிமென்ட், ஸ்டீல், ஜவுளி, காகிதம் ஆட்டோமொபைல், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் செய்யலாம். தாராளமாக இவற்றில் ஈடுபடலாம்.
இன்னும் 25 வருடங்களுக்கு இந்தத் துறையில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு மூட்டை சிமென்ட் தயாரிக்க 100 ரூபாய் செலவழித்தீர்களானால், 220 ரூபாய் லாபம் பார்க்கலாம். அதேபோல, ஸ்டீல் தொழிலில் 40 முதல் 50 சதவீத அளவுக்கு லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானம் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் பார்க்கலாம் என்றார் ஆற்காடு வீராசாமி.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரை முந்தி விடும் வேகத்தில் சென்னையை வேகமாக மாற்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் முதல்வர் கருணாநிதி. இதற்காகவே சென்னையில் அவரது முந்தைய ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமான டைடல் பூங்கா கட்டப்பட்டது.
மேலும், அதேபோல இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்டவற்றிலும் இதேபோன்ற தொழில்நுட்பப் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது.
தமிழகத்தை ஐடி துறையில் தன்னிறைவு பெற்ற, முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் தயாநிதி மாறனுக்கு இப்பொறுப்பை வாங்கித் தந்தார் முதல்வர் கருணாநிதி. தற்போது இத்துறையின் அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ராசாதான் உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தயவு செய்து, ஐடி துறையில் முதலீடு செய்யாதீர்கள், அது வீண், பேசாமல் சிமென்ட், செங்கல் துறைகளில் பணத்தைப் போடுங்கள் என மூத்த அமைச்சரான ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு வீராசாமியின் கருத்து குறித்து இந்த மாநாட்டில் கநல்து கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, எனவே அவர் கூறியது குறித்து என்னால் கருத்து கூற முடியாது என்று கூறி விட்டார் ராசா.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications