காஞ்சிபுரம் வாந்தி-பேதி: பலி 6 ஆனது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வேகமாக பரவி வரும் வயிற்றுப் போக்கு, வாந்தி, பேதிக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம், டோல்கேட், லாலா குட்டைத் தெரு, மலையாள தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
மேல்நிலை குடிநீர்த் தொட்டியிலிருந்து அசுத்த நீர் சப்ளை ஆனதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.
மாசு கலந்த குடிநீரை பருகிய பலருக்கும் அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க போதிய இடம் இல்லை. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றிலும் தங்க வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டதால் இது காலராவாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள தெருவைச் சேர்ந்த வஜ்ரவேலு (70) என்பவரும், ஒரு வயது பெண் குழந்தையும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து மேலும் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா, பாமக எம்எல்ஏ சக்திகமலாம்பாள் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்தனர். சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
உரிய சுகாதார நடவடிக்கைகள், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications