மேனன் இலங்கை போகிறார் - பிரணாப் பயணம் ரத்தாகுமா?
கொழும்பு: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கை போவார் என்பது உறுதியாக தெரியாத நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கை செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவை இலங்கைப் படைகள் சுற்றி வளைத்துள்ளன. முல்லைத்தீவும் வீழ்ந்தால் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு கூறி வருகிறது.
ஆனால் இலங்கைப் படையினரின் தாக்குதலில் சிக்கி அப்பாவித் தமிழர்கள் பலர் உயிரிழந்து வருவது குறித்து தமிழக கட்சிகள் கவலை தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கண்டிப்பாக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவோம் என பிரதமர் உறுதியாக தெரிவித்துள்ள போதிலும், இப்போதைக்கு பிரணாப் போவதற்கான சாத்தியக்கூறுகளைக் காணோம்.
இந்த நிலையில் வெளியுறவுச் செயலாளர் மேனன் இலங்கை போகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் மேனன் இலங்கை செல்வார் எனத் தெரிகிறது. இலங்கை நிலவரம் குறித்து அவர் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேனனுடன், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங்கும் உடன் செல்வார் எனத் தெரிகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு, இந்தியா பல வகைகளிலும் உதவி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் ரா உளவுப் படை, பிரபாகரனின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கைக்கு உதவி வருவதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தப் பின்னணியில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளருடன், மேனன் இலங்கை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications