ப.சிதம்பரம் செயலர் எனக் கூறி அமைச்சருக்கு திட்டு
திருவனந்தபுரம்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் செயலாளர் என்று கூறிக் கொண்டு ஒரு நபர், கேரள வனத்துறை அமைச்சரை தரக் குறைவாக திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
கேரள வனத்துறை அமைச்சர் பினாய் விஸ்வத்தை, நாராயணன் என்பவர் தொடர்புகொண்டு தன்னை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நேர்முக உதவியாளர் என அறிமுகம் செய்துகொண்டார்.
சபரிமலை அருகே உள்ள பொன்னம்பல மேட்டிற்கு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரினார்.
பொன்னம்பல மேடு பகுதியில் பெரியார் புலிகள் சரணாலயம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விடவே அந்த நபர் கேரள அமைச்சரை அணுகினார். ஆனால் அவர் மீது அமைச்சர் விஸ்வத்திற்கு சந்தேகம் எழவே இப்பிரச்சனையில் தலையிட முடியாது என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அமைச்சரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் விஸ்வம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை பார்த்ததும் ப.சிதம்பரம் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய அதிகாரிகளில் நாராயணன் என்ற பெயரில் யாரும் இல்லை என்று கூறியதோடு, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ப.சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications