ராமேஸ்வரம் வரும் பர்னாலாவுக்கு கொலை மிரட்டல்
ராமேசுவரம்: ராமேஸ்வரம் வரவுள்ள ஆளுநர் பர்னாலாவை வெடிகுண்டு வைத்துக் கொல்லப் போவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் விஜயம் செய்யுள்ள ராமேஸ்வரம் குருத்வாராவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் பர்னாலா வருகிற 15-ம் தேதி ராமேசுவரத்தில் உள்ள குருத்துவாரா சிங் மடத்துக்கு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார், எஸ்.பி. செந்தில்வேலன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராமேசுவரம் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் செல்போனுக்கு ஒரு மர்மபோன் வந்தது. அதில் பேசிய நபர் ஆளுநரை வெடி குண்டு வைத்து கொல்வோம்'' என்று மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பாண்டியன் ராமேசுவரம் டி.எஸ்.பி. கமலாபாயிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி அதே பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் செல்போனில் பதிவான அந்த டெலிபோன் நம்பரை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications