இலங்கை தமிழருக்காக கைகோர்த்த பாஜக-நெடுமாறன்

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்தி தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோரும், தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருநாவுக்கரசர் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் படும் துன்பம் சொல்லி மாளவில்லை. இது பற்றி மத்திய அரசிடம் எவ்வளவு சொல்லியும் நடவடிக்கையில்லை. பிரதமர் வாக்கு கொடுத்த பிறகும் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை. அவர் செல்வாரா என்பதும் தெரியவில்லை.
கிளிநொச்சியில் இருந்து 1.5 லட்சம் தமிழர்கள் வெளியேறி உள்ளனர். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணை போகிறது என்றார்.
இல.கணேசன் பேசுகையில்,
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் இருந்து வருகிறது. அங்கே வாழும் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். இது இலங்கை பிரச்சினை அல்ல. இந்திய பிரச்சினை என்றார்.
இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேசுகையில், பிரச்சனைக்கு 2 வழிகளில் தீர்வு காண முடியும். ஒன்று போரை நிறுத்தினால் அமைதி கிடைக்கும். மற்றொன்று சுடுகாட்டு போகும்படி செய்தால் அமைதி கிடைக்கும். இதில் எந்த வழியில் மத்திய அரசு எங்களுக்கு உதவ போகிறது என்று தெரியவில்லை. இது இந்திய நாட்டின் 100 கோடி மக்களின் பிரச்சினையாக கருதி விரைவில் ஒரு நல்ல முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
பழ.நெடுமாறன் பேசுகையில், பாஜக ஆட்சி காலத்தில் இலங்கையில் எந்த தமிழரும் கொல்லப்படவில்லை. அங்கு இந்தியா நாட்டு கப்பல் படை சுற்றி வரவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையை இந்திய நாட்டு கப்பல் படை காவல் காத்து கொண்டு இருக்கிறது. இது எல்லாம் மக்களுக்கு தெரியும் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications