சத்யம் நிறுவனத்திற்கு உதவி நிதி கிடையாது - அரசு அறிவிப்பு
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உதவி நிதி (பெய்ல் அவுட்) கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமலிங்கராஜுவின் மோசடித்தனத்தால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 2000 கோடி வரை மத்திய அரசு உதவி நிதி தரும் என்று பேச்சு நிலவி வருகிறது.
ஆனால் மத்திய அரசு இதை மறுத்துள்ளது. இருப்பினும் சத்யம் நிறுவன ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொழில்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் கூறுகையில், சத்யம் நிறுவனம் செய்த தவறை திருத்தவோ அல்லது ஈடு கட்டவோ (உதவி நிதி) மத்திய அரசு முயலாது. இருப்பினும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது சத்யம் இயக்குநர்கள் குழுவின் முடிவும் கூட.
சத்யம் விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு தனது கடமையை செய்யும். சட்டத் திட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை அரசு செய்யும். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் காக்கப்படும். நாட்டின் பெயரும் இதில் அடங்கியிருப்பதால் அதுவும் காப்பாற்றப்படும்.
ஐடி துறையில், இந்தியா பெற்றுள்ள வெற்றிக்கும், நல்ல பெயருக்கும் சத்யத்தால் களங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications