சமாஜ்வாடியில் சஞ்சய் தத் - தங்கை பிரியா விமர்சனம்
மும்பை: சமாஜ்வாடி கட்சியுடன் இணைய சஞ்சய் தத் முடிவு செய்திருப்பது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று அவரது தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் லக்னோ வேட்பாளராக நடிகர் சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை சட்ட சிக்கல் காரணமாக அவரால் போட்டியிட முடியவில்லை என்றால் அவரது மனைவி மான்யதா போட்டியிடுவார் எனவும் சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.
சஞ்சய் தத் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்ப்பது குறித்து அவரது தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சஞ்சய் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முடிவு செய்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் காங்கிரஸ் குடும்பம் என்பதை நாடே அறியும். இந்த நிலையில் சஞ்சயின் முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது.
ஆனால் இது எனது சகோதரின் முடிவு. இதனால் குடும்பத்திற்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.
இது சஞ்சயின் சொந்த முடிவு. மற்றவர்களுக்கு (மனைவி மான்யதா) இதில் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை.
எனது தந்தை சுனில்தத் வட மேற்கு மும்பையின் எம்.பியாக மக்கள் பணியாற்றினார். எனது தந்தையின் சேவைதான் அங்கு பெரிதாக இருந்தது. அவரது அரசியலை விட சேவையையே மக்கள் பார்த்தனர்.
மான்யதா குறித்து சொல்வதற்கு ஏதும் இல்லை. அவர் எனது அண்ணனின் மனைவி என்றார் அவர்.
பிரியா தத் இப்படிக் கூறினாலும், சஞ்சய் தத்தின் முடிவால் அவரது குடும்பத்திற்கிடையே பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications