மும்பை தாக்குதல்: மாயமான சாட்சி திரும்பி வந்தார்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் முக்கிய சாட்சியான பெண் மாயமாகி பின்னர் திரும்பி வந்துள்ளார்.
மும்பையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், படகு மூலம், கபே பரேட் பகுதியில் வந்திறங்கியதை நேரில் பார்த்தவர் அனிதா உதயா. இவர் அப்பகுதியில் உள்ள மீனவர் காலனியில் வசித்து வரும் பெண்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் இவர் முக்கிய சாட்சியாக உள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இவரைக் காணவில்லை. இதனால் பதட்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை அனிதா திரும்பி வந்துள்ளார். இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேசம் கூறுகையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் அனிதா முக்கிய சாட்சி ஆவார். அவர் ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. அவரைத் தீவிரமாக தேடி வந்தோம்.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அனிதா, தனது வீடு திரும்பி விட்டார்.
இதையடுத்து அவரை போலீஸார் சென்று காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications