சென்செக்ஸ் அபார ஏற்றம் - 253 புள்ளிகள் உயர்ந்தது
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. 253 புள்ளிகள் உயர்ந்து 9,300 ஆக உயர்ந்தது.
வர்த்தக முடிவுக்கு முன்பாக சென்செக்ஸ் 9,300.45 ஆக இருந்தது. 253 புள்ளிகள் உயர்ந்தது.
தடுமாற்றத்தில் இருந்து வரும் பேங்க் ஆப் அமெரிக்காவை காக்க அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. பல்வேறு உலக சந்தைகளிலும் ஸ்திரமான நிலை காணப்படுவதால், மும்பை பங்குச் சந்தையிலும் இன்று சென்செக்ஸ் இறங்கவில்லை.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோதே 161 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது சென்செக்ஸ். வர்த்தக முடிவுக்கு முன்பாக 253.71 புள்ளிகள் உயர்ந்தது.
இன்றைய பங்கு வர்த்தகத்தில், எண்ணை, காஸ், மெட்டல்கள், மின்சாரம், வங்கித்துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டன.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 83.50 புள்ளிகள் உயர்ந்து 2,820.20 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications