2வது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று காலை தனது சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திருமாவளவன்.
பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று அவருடன் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
தினசரி 3 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் மத்திய அரசு புறம் தள்ளி விட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள்.
பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்று கூறினால் மேனனை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் ராஜபக்சே.
இப்படிப்பட்ட நிலையில்ஐந்து லட்சம் தமிழர்களின் உயிர் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலும் இந்திய அரசு பெருத்த மெளனம் காப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் திருமாவளவன்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications