அமிர்தசரஸில் மன்மோகன் Vs சித்து?

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாகியுள்ளது.
சித்துவை அமிர்தசரஸில் நிறுத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. இந் நிலையில் அந்தத் தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட்டால் வெற்றி உறுதி என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிடம் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜகவின் முக்கிய வேட்பாளரை தோற்கடிப்பதோடு வெற்றியும் உறுதி என சோனியா கருதுகிறார்.
அதேபோல பாஜக தலைவர் அத்வானி வழக்கம்போல குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து யாரை நிறுத்தினாலும் அத்வானியின் வெற்றி உறுதி என காங்கிரஸ் கருதுகிறது.
மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கருதப்படுகிறது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள தொகுதியி்ல் நிற்கலாம். இங்கு அவரை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத்தை நிறுத்த சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது. இதை காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
பாஜகவில் மாதி விமானப் படையின் தளபதி:
இதற்கிடைய முன்னாள் விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அனில் யஷ்வந்த் டிப்னிஸ் பாஜகவில் இணையவுள்ளார்.
இது குறித்து பாஜகவுடன் அவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications