பஸ்களுக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு
விழுப்புரம்: பேருந்துக்கு தீ வைப்பவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு இருப்பதாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசாணம்முத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பேருந்துகள் மீது கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனை தடுக்கும் விதமாக பேருந்திற்கு தீ வைப்போரை கண்டதும் சுட உத்தரவிட்டு இருப்பதாக விழுப்புரம் சரக டிஐஜி
தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்டம் பாயும்:
இதற்கிடையே பேருந்துகள் மீது கல் எரிந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் முக்கிய சாலைகளில் சென்ற அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இதில் 15 பஸ்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கைதானவர்கள் மீது உள்ள பழைய வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து குண்டர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் மீது ரவுடி சரித்திர பதிவேடு தொடங்கப்படும். வரும் காலங்களில் அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
சமூக விரோத செயல்களில் படித்த மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு வருவது வருத்தத்துக்குரியது. இதனால் அவர்களால் அரசு பணிக்கோ, தனியார் நிறுவனத்திலோ பணிபுரிய சேர முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்று எச்சரிக்கிறேன் என்றார் பிரதீப் குமார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications