லாரி மீது கார் மோதல்: இஸ்ரோ விஞ்ஞானி-மனைவி பலி
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் நடந்த சாலை விபத்தில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதள விஞ்ஞானி மற்றும் அவரது மனைவி பலியாயினர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் இணை இயக்குநராக இருந்தவர் வாரானாசி கிருஷ்ண ராவ் (57). இவரது மனைவி சுசிலா (52). இவர்களுக்கு விசுவநாதன் (31), சீனிவாச மூர்த்தி (28) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இரண்டாவது மகன் சீனிவாசனுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவரை வழியனுப்ப நேற்று காலை கிருஷ்ண ராவ் தனது மனைவியுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.
பின்னர் சூலூரில் இருக்கும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பெத்திக்குப்பம் அருகே வந்த போது டிரைவர் பாட்ஷாவின் கவனக் குறைவு காரணமாக நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில் கிருஷ்ண ராவ் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியாயினர். டிரைவர் படுகாயம் அடைந்தார். பெற்றோரின் மரண செய்தி கேட்ட சீனிவாசன் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்.
இச்சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications