இறந்தவர்களுக்கு பதவி-அதிமுகவில் காமெடி!
சென்னை: உயிருடன் இல்லாதவர்களுக்கு கட்சிப் பதவி அளித்ததைக் கண்டித்து ஜெயலலிதா வீடு முன்பு போராட்டம் நடத்த அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி புகார் அளிக்க, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீடு முன் திரண்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை முடித்து விட்டு வீடு திரும்பிய போது, ஜெயலலிதாவின் காரை அதிருப்தியாளர்கள் முற்றுகையிட முயன்றனர்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் குமரகுருவிற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
ஆனால் ஜெயலலிதாவின் கார் நிற்காமல் சென்று விட்டது. பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மனுவை பெற்று, அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.
அதிருப்தியாளர்கள் கொடுத்த மனு விவரம் இதுதான்...
விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலராக உள்ள குமரகுரு, தனக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களுக்கே பதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார். கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாவட்டச் செயலரின் சமூகத்தைச் சேர்ந்த 30 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இறந்தவருக்கு இணைச் செயலாளர் பதவி!:
கடந்த மாதம் 26ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக தோட்டபாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவி்டடன.
ஒன்றியச் செயலாளர் தாத்தா!:
தியாகதுருகம் ஒன்றியச் செயலராக நடக்கவே முடியாத வைத்தியலிங்கம் என்ற முதியவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கொளப்பாக்கம் நேர்காணலில் நீக்கம் செய்யப்பட்டவர். மாவட்டச் செயலாளரின் உறவினர் என்பதால் இவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
தியாகதுருகம் பேரூராட்சியில் எம்ஜிஆர் மன்றச் செயலராக சவுந்தர்ராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இறந்து ஒன்பது மாதம் ஆகிறது.
இது போல், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இறந்து போன 10 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டச் செயலர் கொடுத்த தவறான தகவல் தான் இதற்கு காரணம். எனவே, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
வடக்கே வன்னியர்..தெற்கே தேவர்! 3 பேருக்கு செக்.. அய்யா ராமதாஸை வைத்து சின்னம்மா சசிகலா போடும் கணக்கு -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications