மேடாஸ்: எஸ்.எப்.ஐ.ஓ. விசாரணை ஆரம்பம்!
டெல்லி: ராமலிங்க ராஜுவின் மகன்கள் ராமராஜு, தேஜா ராஜு வசமுள்ள மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் மீது அதிரடி விசாரணையைத் தொடங்கிவிட்டது 'தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு' (SFIO).
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இந்த நிறுவனங்களின் சொத்துக்கள், நிலங்கள் முழுவதையும் அவற்றின் இயக்குநர் குழு மட்டுமே கட்டுப்படுத்தி வருவதாக எழுந்துள்ள சந்தேகம் காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்யம் நிறுவன ஊழல்கள், ராமலிங்க ராஜுவின் மோசடிகள் போன்றவற்றுக்கும் இந்த மேடாஸ் நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது முதல்கட்ட புலனாய்வில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அடுத்த கட்டமாக இந்த தீவிர மோசடி புலனாய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவன வருவாய் முழுவதையும், இந்த இரு நிறுவனங்களை நடத்தவே ராஜு செலவழித்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் விசாரணைகள் துவங்கியுள்ளதாம். ஒரு வேளை இது உண்மையாகிவிட்டால், மேடாஸ் நிறுவனங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் ஆபத்து உள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications