நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி: நடிகர் கார்த்திக்!
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதன் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அன்புவனத்தில் நடந்த பாலபிரஜாபதி சுவாமிகள் பிறந்தநாள் விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், அம்மாவை தெய்வமாகவும் கோயிலாகவும் நினைத்து வழிபடுகிறவன் நான். அதனால் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. இது ஆன்மீக மேடை. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை.
நமக்கு முன்னோடியாக திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்றும், மரியாதையும் வைத்துள்ளேன்.
இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். பதவியில் அமர்ந்ததும் மக்களை மறந்து விடுகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பினரும் தீர்வு காண வேண்டும்.
வரும் மக்களவைத் தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி, ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்.
எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications