கள் இறக்கும் போராட்டம்-நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை: கள் இறக்கி, விற்று போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கள் இறக்க, விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு மது வகைகளை விதம் விதமாக கடை திறந்து விற்கும்போது கள்ளுக்கு மட்டும் தடை விதிப்பதா என கூறி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பி்ல் கள் இறக்கி விற்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு அரசு தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கள் இறக்கும் போராட்டம் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் போராட்டம் நடத்த வந்த தமிழ்நாடு கள் இறக்குவோர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து கல்யாண மண்டபம் ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.
கோவை, சின்னதடாகம் பகுதியில் விவசாயிகள் சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் ராமசாமி உட்பட 24 பேர் கள் இறக்கி விநியோகம் செய்ய வந்த போது மரப்பாலம் அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 100 பேரும், திருப்பூர் பகுதியில் 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பெத்தானியாபுரத்தில் கள் இறக்குவதற்காக மண்பானைகளுடன் வந்த நாடார் மகாஜன சபைத் தலைவர் கரிக்கோல் ராஜ் உட்பட 150 பேர் கைது செய்யப் பட்டனர்.
கள் இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் பனைவாரியத் தலைவர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கு எதிராக போராட்டக் காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல கள் இறக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு நாடார் பேரவையினரை போலீஸார் கைது செய்தனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications