வி.சிறுத்தை பிரமுகர் மீது பாய்ந்த 'குண்டாஸ்'
விழுப்புரம்: இலங்கைத் தமிழர்களுக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்களுக்கு தீ வைத்து எரித்த அந்தக் கட்சியின் பிரமுகர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 4 பஸ்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 37 பேர் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
மேலும் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தியது தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 156 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சாலை மறியல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வன்முறையின்போது பேருந்துகள், ஓட்டுனர்கள், கண்டக்டர்களைத் தாக்கி பொது மக்களை பீதியடையச் செய்து பேருந்துகளுக்கு தீ வைத்த கண்ணன் (34) என்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டரின் உத்தரவின் பேரில் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications