70 நாட்டு முஸ்லீம் தலைவர்கள் ஒபாமாவுக்கு கடிதம்
வாஷிங்டன்: 70 நாடுகளைச் சேர்ந்த 300 இளம் முஸ்லீம் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், உலகில் நிலவும் பதட்டத்தைத் தணித்து, முஸ்லீம்கள் அமைதியுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.
கடிதம் அனுப்பியவர்களில் 9 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் தலைநகர் டோஹாவில் கடந்த வாரம் நடைபெற்ற நாளைய முஸ்லீம் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. இந்தக் கடிதம் குறித்து அந்த முஸ்லீம் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லீம் உலகம் குறித்த அமெரிக்காவின் பார்வையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர ஒபாமா முயல வேண்டும்.
பரஸ்பரம் நலன் மற்றும் பரஸ்பரம் மரியாதைக்கு அமெரிக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
முஸ்லீம் உலகம் அமைதியுடன் வாழவும், உலக அளவில் நிலவி வரும் பதட்டங்களைக் குறைக்கவும் ஒபாமாவால் முடியும்.
இளைஞர்கள், சிறுபான்மையினரின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒபாமாவும், பிற உலகத் தலைவர்களும் பாடுபட வேண்டும்.
சர்வதேச அளவிலான பிரச்சினைகளைத் தீர்க்க சுமூகப் பேச்சுவார்த்தைகளையும், தூதரக ரீதியிலான முயற்சிகளையும் ஒபாமாவும் பிற உலகத் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
உலகின் இன்றைய தலைவர்களான நீங்கள், எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களேயானால், நாளைய தலைவர்களாகிய நாங்கள், எங்களது உலகத்தை சிறப்பான எதிர்காலத்துடன் கூடியதாக மாற்றி அமைப்போம். அனைவரும் அமைதியுடன் வசிக்கக் கூடிய அருமையான உலகமாக அது இருக்கும்.
இந்த சீரிய நோக்கம் நிறைவேற உங்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். மாற்றத்திற்கான நேரம் தற்போது வந்து விட்டது என்று அதில் கூறியுள்ளனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications