கன்னியாகுமரியில் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவி வரும் எலிக் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சலால் கடந்த ஆண்டு பலர் பாதிக்கப்பட்டனர். உயி்ர் இழப்பும் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. நாகர்கோவிலில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவன் காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சுகாதார துறையினர் டெங்கு அறிகுறி இல்லை என கூறி விடுகின்றனர்.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் கொசுத்தொல்லை பெருகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தை ஓட்டிய கேரள மாநில பகுதிகளான பறசாலை, பொழியூர், உள்ளிட்ட இடங்களில் எலிகாய்ச்சல் பரவி வருகிறது.
பாறசாலை குளத்தூர் உச்சகட்டையை சேர்ந்த பானு, கோயில்விளை பொன்னுமுத்தன் ஆகிய 2 பேர் பலியாகியுள்ளனர். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மேலும் குமரி-கேரள எல்லையை ஓட்டி 46 பேர் எலிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குமரி மாவட்ட மக்களையும் பீதி அடைய செய்துள்ளது.
திடீர் வாந்தி பேதி - தொழிலாளி பலி
தூத்துக்குடி பகுதியிலுள்ள முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, கோவங்காடு, பழைய கயல், தெர்மல் நகர், மீனவர் காலனி, ராஜபாண்டி நகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்..
அவர்களுக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் உமா, உறைவிட மருத்துவ அதிகாரி விஸ்வநாதன், உதவி அதிகாரி சைலஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏரல் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குணசெல்வம் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் 14 பெண்கள் உள்பட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications