சம்பள கணக்கில் தில்லுமுல்லு; பிரதமர் அலுவலக ஊழியர் கைது
டெல்லி: சம்பள கணக்கில் தில்லுமுல்லு செய்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்ததாக பிரதமர் அலுவலக கிளர்க் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சீனியர் கிளர்க்காக பணியாற்றி வருபவர் விகாஸ் ராணா. சமீபத்தில் இவர் மீது அலுவலக பணத்தில் கையாடல் செய்ததாக அக்கவுன்ட்ஸ் துறையை சார்ந்த இணை செயலர் சைலி குமார், பாராளுமன்ற தெருவில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார்.
அவரது புகாரில், பிரதமர் அலுவலகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தற்காலிகமாக பணியாற்ற வந்த நான்கு ஊழியர்களின் சம்பளத்தில் விகாஸ் ராணா கையாடல் செய்துள்ளார்.
அவர்கள் தங்கள் பழைய துறைக்கு சென்ற பின்னும் அவர்களுக்கு சம்பளம் அளித்துள்ளதாக கணக்கு எழுதியுள்ளார். அந்த பணத்தை வங்கியிலுள்ள தனது சொந்த கணக்கில் சேர்த்துள்ளார் என புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. டெல்லி போலீசின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்தனர். அதன் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம்.
இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications