விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் படு காயம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் அதில் பணிபுரிந்த 2 பேர் படு காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது சூரார்பட்டி கிராமம்.
இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலைகள் நிறைய உள்ளது.
அதில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு தொழிற்சாலையில், 40 அறைகளில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு அறையில் திடீரென பட்டாசு வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த பொன்னுசாமி, வசந்தா, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த வெடி விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications