செங்கோட்டை அருகே 101 கிலோ வெடிபொருள் சிக்கியது
செங்கோட்டை: செங்கோட்டை அருகே 101 கிலோ வெடிபொருட்கள் சிக்கியுள்ளன. நாசவேலைக்காக இது கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் கிழ புதூர் மெயின் ரோட்டில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. சந்தேகமடைந்த போலீஸார் அந்தக் காரை நிறுத்த சைகை காட்டினர்.
ஆனால் காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார். இதையடுத்து காரை கைப்பற்றிய போலீஸார் உள்ளே சோதனை போட்டனர்.
அப்போது அதில் 6 பைகள் இருந்தன. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே, பொட்டாசியம் குளோரைடு மற்றும் சல்பேட் ஆகிய வெடிமருந்துகள் இருந்தன.
இதுதவிர ஒயரும் இருந்தது. இவற்றின் மொத்த எடை 101 கிலோ ஆகும்.
இவற்றை யார் கொண்டு வந்தது, எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. குடியரசு தினத்தன்று நாச வேலையில் ஈடுபடுவதற்காக இவற்றைக் கடத்தினரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரை ஓட்டி வந்த நபர் கேசவபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நடராஜன் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் கிடைத்தால்தான் இந்த வெடிபொருட்களுக்கான பின்னணி தெரிய வரும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications