For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேன் - லாரி மோதலில் 15 பேர் பரிதாப சாவு

By Sridhar L
Google Oneindia Tamil News

Accident near Nellai
திருநெல்வேலி: நெல்லை அருகே இன்று அதிகாலையில், பால் லாரியும், வேனும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர்.

நெல்லை டவுனைச் சேர்ந்த பன்னிருதிருவுருமாலை என்ற வழிபாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள், சங்கரலிங்கம் என்பவரது தலைமையில், ஒரு வேனில் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லை அருகே தாழையூத்து புதுக்காலனி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது மணி இரண்டரை இருக்கும்.

அந்த சமயத்தில் எதிரே நாகர்கோவிலிலிருந்து மதுரைக்கு ஆரோக்கியா பால் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று படு வேகமாக வேன் மீது மோதியது. இதில் வேன் தூக்கி எறியப்பட்டது, அப்பளம் போல நொறுங்கிப் போனது.

தகவல் அறி்ந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். சிதைந்து போன வேனுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்தக் கோர விபத்தில் செல்வி, சண்முகம், கனகசபாபதி, பாலசுப்ரமணியம், சண்முகம், லட்சுமி, அய்யம் பெருமாள், மகராஜன், அவருடைய மனைவி மீனாட்சி, ஆவுடையம்மாள், சங்கரலிங்கம், அவருடைய மனைவி லோகம்மாள், வேன் டிரைவர் வேலுமணி, கிளீனர் இசக்கி, பர்வதம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ராமலட்சுமி, சுப்புலட்சுமி, சுந்தரம், இன்னொரு ராமலட்சுமி, லாரி டிரைவர் முருகேசன் ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நிவாரண நிதி அறிவிப்பு

இதற்கிடையே விபத்தில் பலியான 15 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் இழந்தவர்கள் நகைகள் கொள்ளை

விபத்தில் உயிரிழந்த நெல்லை வடிவு என்ற செல்வி தாலி செயின், வளையல், மோதிரம், கம்மல், மூக்குத்தி, என்று சுமார் 20 பவுன் வரை நகைகள் அணிந்து இருந்தார்.

ஆனால் அவரது உடலில் கம்மலும், மூக்குத்தியும் மட்டுமே இருந்தது. இதுபோல் விபத்தில் பலியான 6 பெண்களிடம் இருந்தும் செயின், வளையல், மோதிரம் என்று ஏராளமான நகைகள் கொள்ளை போய் உள்ளது. இது 30 பவுன் இருக்கலாம் என இறந்தவர்களின் உறவினர்கள் கூறினர்.

இதை மீட்பு பணி செய்த பொதுமக்கள் எடுத்தார்களா அல்லது வேறு யாரேனும் எடுத்து சென்றார்களா என விசாரணை நடத்து வருகிறது.

8 பேர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்

பலியான 15 பேரில் 8 பேர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். இதில் கணவன்-மனைவியாக 4 ஜோடி தரிசனத்திற்கு சென்றது.

அதில் சங்கரலிங்கம், மகாராஜன், சண்முகம், பாலசுப்பிரமணியன், ஆகிய 4 பேரும் தங்கள் மனைவியுடன் சென்றனர். இதில் சங்கரலிங்கம், மகாராஜன் ஆகியோர் தங்களது மனைவியுடன் பலியாகி விட்டனர். சண்முகம், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் பலியாகி விட்டனர். இவர்களின் மனைவிகள் ராமலெட்சுமி, சுப்புலெட்சுமி ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X