காஷ்மீர் லஷ்கர் தலைவர் அபு ஹம்சா சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசாருடன் நடைபெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான அபு ஹம்சா சுட்டுக் கொல்லப்பட்டார். மோதலில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு சென்றனர். இவர்களை கண்டதும் தீவிரவாதிகள் சுடத் துவங்கினர்.
பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 16 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் அபு ஹம்சா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து சோபூர் காவல்துறை கண்காணிப்பாளர் பீம் சென் கூறுகையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதி அபு ஹம்சா கொல்லப்பட்டார். காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத செயல்களில் அவனுக்கு முக்கிய பங்குள்ளது.
பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியவர் அபு ஹம்சாதான்.
இந்த மோதலில் ஒரு ராணுவ வீரரும் பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications