கருணாநிதி, ஜெ. இலங்கை வர வேண்டும்: பிரணாபிடம் ராஜபக்சே கோரிக்கை!

வன்னிப் பகுதியில், போரற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் கிட்டத்தட்ட 800 பேரை இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளன.
இதுகுறித்த தகவல்கள் வெளியே வராமல் இலங்கை அரசு படு கவனமாக அதை மறைத்துள்ளது. கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்து ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்களைக் கொன்றதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்த அநியாய இனப்படுகொலையை இலங்கை ராணுவம் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில் நேற்று மாலை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
கொழும்பு சென்று சேர்ந்தவுடன், ராஜபக்சேவை பிரணாப் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்தாது, உயிரிழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரணாப்பிடம் ராஜபக்சே கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், தமிழக முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அடங்கிய தமிழக குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். வன்னிப் பகுதிக்கு சென்று அவர்கள் நிலைமையை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியிடம் ராஜபக்சே கேட்டுக் கொண்டாராம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications