மத்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது: திருமாவளவன்
செங்கல்பட்டு: இலங்கைக்கு பீரங்கிகளைக் கொடுத்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் மத்திய அரசு கொச்சைப்படுத்தியுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரி மாணவர்களை நேற்று திருமாவளவன் சந்தித்தார். அவர்களிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தங்களது கோரிக்கை நிறைவேறாத வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ள மாட்டோம் என மாணவர்கள் கூறி விட்டனர்.
பின்னர் உண்ணாவிரத மேடைக்கு அருகில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஈரோடு, திருவனந்தபுரம் வழியாக சிங்கள ராணுவத்துக்கு, இந்திய அரசு பீரங்கிகளை அனுப்பியதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த இன படுகொலையை கண்டு, உலகெங்கும் உள்ள பத்தரை கோடி தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்திய அரசு, தமிழர்களின் உணர்வை மதிக்கவில்லை; கொச்சைப்படுத்துகிறது.
தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக இந்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 29-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அப்போது அடுத்த கட்ட போராட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும்.
பிரணாப் முகர்ஜி இப்போது கொழும்பு சென்றுள்ளார். அவர் ஏன் போகிறார் என்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. போரை நிறுத்துங்கள் என்று கூறத்தான் பிரணாப் முகர்ஜி போகிறார் என்று மத்திய அரசும் சொல்லவில்லை, பிரணாப் முகர்ஜியும் கூறவில்லை.
எனவே மேனனைப் போல, இந்திய - இலங்கை உறவு நன்றாக உள்ளது என்று பிரணாப் முகர்ஜியும் கூறத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறாரோ என்று கருத வேண்டியுள்ளது என்றார் திருமாவளவன்.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் கெம்புகுமார், ஆறுமுகநயினார், துரியன், திருமுருகன் ஆகியோரையும் திருமாவளவன் நேரில் பார்த்து ஆறுதலும், வாழ்த்தும் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications