For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை

By Sridhar L
Google Oneindia Tamil News

ஐ.நா.: இலங்கையில், போரற்ற பாதுகாப்பு பிரதேசப் பகுதியில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது கவலை தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்னியில் தொடரும் முடிவற்ற மோதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் பாதுகாப்பை- மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.

அனைத்து மக்களும் இடம்பெயர்வதை அரசும் விடுதலைப் புலிகளும் உறுதிசெய்ய வேண்டும்.

போர் அற்ற மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை மதிக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X