ஜெயலலிதாவிடம் கூட்டணியை வலுப்படுத்தும் பொறுப்பு: பர்தன்
சென்னை: ஜெயலலிதாவின் முயற்சியால் உருவாகியுள்ள இடதுசாரிகள் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, அதில் யாரையெல்லாம் சேர்ப்பது என்பது குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார். அவரே கூட்டணியையும் வலுப்படுத்துவார் என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் கூறியுள்ளார்.
நேற்று மாலை சென்னையில் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பர்தன் சந்தித்துப் பேசினார். அவருடன் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் சந்திப்பு குறித்து பர்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் முயற்சியால் இடதுசாரிகள் வலுவான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த அணியை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம். இதற்கான பொறுப்பை ஜெயலலிதாவிடம் வழங்கியிருக்கிறோம். அவர், எந்த கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து முடிவு செய்வார்.
பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து வியூகம் வகுத்து அதன் படி செயல்படுவோம்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் சேர்ந்து விளையாடி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அது போன்ற சக்திகளை நாங்கள் முறியடிப்போம்.
3-வது அணி சம்பந்தமாக கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஜெயலலிதா கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விiகம் குறித்தும் பேசினோம் என்றார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications