பிரணாப் பயணத்தில் எந்த ரகசியமும் இல்லை: கூறுகிறது இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணத்தில் எந்தவித ரகசியமும் இல்லை என்று இலங்கை அமைச்சர் நிமல சிறிபாலா டிசில்வா கூறியுள்ளார்.
இதுகுறித்து டிசில்வா கூறுகையில், பிரணாப் முகர்ஜி வருகை குறித்து எத்தனையோ ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரது வருகையில் ரகசியம் ஏதும் இல்லை. இது வழக்கமான பயணம்தான்.
இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு நிலவுகிறது. இந்த உறவை பலப்படுத்துவதற்காகவும், தீவிரவாதத்தை ஒழிக்க ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அவர் வந்தார்.
ஏனென்றால், தீவிரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலின்போது நான் இந்தியாவில் இருந்தேன். தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர். அதனால்தான், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆர்வமாக உள்ளது என்றார் நிமல்.












Click it and Unblock the Notifications